தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!
அமைச்சர் நிர்மல் குமாரின் திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த கருத்து எச் ராஜா கண்டனம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு பல்வேறு வகையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் தூய சக்தியா? இந்து விரோத சக்தியா? என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறையே தொடரப்படும் என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் தான்தோன்றித்தனமாகப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது "தூய சக்தி" என்று மேடைக்கு மேடை வாயளந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் தீய சக்தி திமுகவின் இந்து விரோத கருத்தையே எதிரொலிப்பது தான் "மாற்று சக்தி" தவெகவின் லட்சணமா என்று சாடியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடங்கி அமைச்சரின் இந்த பாசிச கருத்து வரை தமிழகத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் தவெகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!
அன்று ஆட்சி அதிகார மமதையில், தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இந்துக்களின் உரிமையை குழி தோண்டிப் புதைக்க முற்பட்டதால்தான், திமுக படுகுழியில் தள்ளப்பட்டு மண்ணைக் கவ்வ வைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த உண்மையை நன்கு உணர்ந்தாவது, இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச திட்டமேதும் இருந்தால், உடனடியாக முதல்வர் விஜய் கைவிட வேண்டும் என்றும் எச். ராஜா வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஆய்வுகள் போதும்... ஆக வேண்டியத பாருங்க..! விளாசிய H. ராஜா..!!