என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!
அரசு மருத்துவமனைகளை சுட்டிக்காட்டி H. ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான படுக்கைக் கட்டில்கள் கேட்பாரற்றுக் கிடக்கும் அவலம் நிகழ்வதாக பாஜக மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். ஈரோடு அரசு மருத்துவனையின் பார்க்கிங் பகுதியில் கேட்பாரற்று போட்டுக் கிடக்கும் நூற்றுக்கும் மேலான புதிய படுக்கைக் கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை நோயாளிகள் உபயோகப்படுத்தக்கூடிய நிலையில் புதிதாக இருப்பவை. அனைத்தும் தூசி படிந்தும், துருப் பிடிக்கும் நிலையிலும் அம்போ என கிடப்பது அவலத்தின் உச்சம் என்று கூறினார்.
அரசு மருத்துவனைகளின் வார்டுகள் மற்றும் வராந்தா தரைகளில் படுத்துக் கிடக்கும் அப்பாவி நோயாளிகள் தமிழகம் முழுவதுமே நிரம்பி வழிகையில், இப்படி யாருக்குமே பலனில்லாமல் படுக்கைக் கட்டில்களை அநாதரவாக போட்டு வைத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் கள ஆய்வு செய்தாக ஊர்வலம் வரும் உங்களது வெத்துவேட்டு அமைச்சர்கள் கண்களில் இன்னமும் இது படாமல் இருப்பது உங்களது அரசின் நிர்வாகத் தோல்வியினையே பறைசாற்றுகிறது என்று கூறினார். அதிகாரிகளுக்கு உங்களது தத்தக்கா பித்தக்கா ஆட்சியில் துளியும் பயமில்லை என்பதன் அலட்சிய அடையாளமே இது என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: "தூய சக்திக்கு அர்த்தம் தெரியுமா விஜய்"..? திமுகவின் நீட்சியே தவெக... வெளுத்துவிட்ட H. ராஜா..!!
இன்று கூட ஒரு மருத்துவமனையின் திடீர் ஆய்வுக்கு வந்த உங்களது அமைச்சர் ஒருவரிடம் ’நீங்கள் வருவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். தகவல் வந்துதான் நாங்களும் வந்தோம்’ என்று சொல்லி மந்திரியின் மூக்கை நிருபர்கள் உடைத்தார்கள் என்றார். இப்படித்தான் எல்லா திடீர் விசிட்டுகளும் முன்கூட்டி அதிகாரிகளிடம் சொல்லி வைத்து செட்-அப்பாக நடைபெறுகின்றனவா? என்று கேள்வி எழுப்பிய H. ராஜா, இந்த வெட்கக்கேட்டிற்கு நாடக மாடல் தவெக உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துவதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!