கோயில் வளாக கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்..! பக்தர்களுக்காக புதிய விதிமுறை..!
பூஜை பொருட்கள் விலையை காட்சிப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் வரும் திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நியாயமான விலையில் தரமான பூஜைப் பொருட்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் முக்கிய உத்தரவு ஒன்றை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பிறப்பித்துள்ளார். சமீபத்தில் மதுரை கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற ஆய்வின்போது, கோயில் வளாகத்தில் செயல்படும் பூஜைப் பொருட்கள் விற்பனை கடைகளில் சில பொருட்கள் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிகமாக விற்கப்படுவதை அமைச்சர் கண்டறிந்தார்.
இந்தச் சூழலில், அனைத்து கோயில்களுக்கும் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, கோயில் வளாகத்திற்குள் இயங்கும் அனைத்து பூஜைப் பொருட்கள் அர்ச்சனைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை கடைகளில் விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்க்கும் வகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பொருளின் பெயர், அளவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலை தெளிவாக எழுதப்பட்ட பலகை அல்லது போஸ்டர் கடையின் நுழைவு அருகே அல்லது பார்வைக்கு எளிதான இடத்தில் வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் பக்தர்கள் ஏமாற்றப்படாமல், தங்கள் பூஜைத் தேவைகளை நியாயமான விலையில் வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி ஒரு பைசா கூட அதிகம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
அத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டால், கடை உரிமையாளர்களுக்கு அபராதம், உரிமம் ரத்து மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம். அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வார்கள். நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி அதிக விலைக்கு பூஜை பொருட்களை விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பூஜை பொருட்கள் தரமானதாகவும் இறைவனுக்கு சமர்ப்பிக்க தகுதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!