×
 

அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK...!

இந்து சமய அறநிலையத்துறை பணி நியமனம் குறித்து தவறான தகவல் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை (HRCE) என்பது இந்து கோயில்கள், மடங்கள், அறநிலையங்கள் மற்றும் சமய சொத்துகளின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் நிதி மேலாண்மையை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட முக்கிய அரசுத் துறையாகும். இத்துறை இந்து சமயத்தின் பாரம்பரிய மற்றும் சமூக நலன் தொடர்பான நிறுவனங்களைப் பாதுகாக்கும் பணியை சுமந்து வருகிறது. 

இந்திய சுதந்திரத்திற்குப் பின், 1959இல் தமிழ்நாடு இந்து சமய அறநிலை சட்டம் இயற்றப்பட்டது. இது 1960 ஏப்ரல் 28ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை எனும் தனி அரசுத் துறையாக உருவெடுத்தது. இன்று இத்துறை தமிழ்நாட்டில் உள்ள 36,425 கோயில்கள், 56 மடங்கள் 1,721 அறநிலைகள் மற்றும் 189 நம்பிக்கை நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது.

2023-2024 நிலவரப்படி, இத்துறையின் கட்டுப்பாட்டில் 46,257 இந்து மற்றும் சமண சமய கோயில்கள் உள்ளன. இத்துறை 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டுள்ளது, மேலும் இது கோயில்களின் நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை வலுப்படுத்தி, சமூக நலன் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் கோரச் சம்பவம்... தமிழக அரசுக்கு 8 வாரம் தான் டைம்... உச்ச நீதிமன்றம் உத்தரவு...!

இதனிடையே இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் வேலைக்கு நியமிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவியது. திமுக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பொய்யானது என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் நியமனம் செய்வதாக பரவிய தகவல் வதந்தி என்று தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: SIR புதுசா முதல்வரே? RK நகர் தேர்தலுக்கு CASE போட்டது யாரு... விளாசிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share