மூஞ்சில ஆசிட் அடிப்பேன்..! இந்த கால் தான போலீஸ் கிட்ட போச்சு..!! புகார் அளித்த மனைவி மீது கொலை வெறித் தாக்குதல்..!!
திருமண மோசடி புகார் கொடுத்த மனைவியின் மீது கொடூர கணவன் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தன் மீது திருமண மோசடி புகார் அளித்த பெண்ணை அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மொட்டை அடித்து விடுவேன் என்றும் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் கண்ணா. இவர் BPO நிறுவனம் நடத்தி வருகிறார். இதனிடையே தன்னை மகேஷ் கண்ணா ஏமாற்றி திருமணம் செய்ததாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்ததாக தெரிகிறது. திருமண மோசடி வழக்கில் இதுவரை மகேஷ் கைது செய்யப்படாத நிலையில் முன்சாவின் பெற்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் தன் மீது ஏமாற்றி திருமணம் செய்ததாக புகார் அளித்த அந்தப் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார் மகேஷ் கண்ணா. அந்தப் பெண்ணின் அலுவலகத்திற்குச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார். இந்த கால் தானே காவல் நிலையம் சென்றது எனக் கூறி பெண்ணின் காலில் அவர் உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாது பல்லாவரத்தில் மனைவி முகத்தில் ஆசிட் வீசிய கணவன் குறித்த வீடியோவை காண்பித்து மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!
முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்றும் அந்தப் பெண்ணை மகேஷ் கண்ணா மிரட்டியுள்ளார். பெண்ணின் தலைமுடியை வெட்டி மொட்டை அடிப்பேன் என்றும் மகேஷ் கண்ணா அச்சுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. பெண்ணின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகேஷ் கண்ணாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புற்றுநோய் ஊசி மருந்து தட்டுப்பாடு! கோவை அரசு மருத்துவமனையில் அவலம்!