×
 

விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

அல்லுசில்லுகளுக்குக கடுமையான பதிலடி தருவேன், 3, 4 கட்சி மாறியவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழக வெற்றிக் கழகத்தை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் சாடல்.

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம்  மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இன்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் இதுவரைத் தான் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை என்றும், ஆனால் இனிவரும் நாட்களில் தனது விமர்சனங்கள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாஜக கூட்டணி மற்றும் தவெக நிர்வாகிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தையும், அதன் தலைவர் விஜய்யையும் நான் இதுவரை விமர்சிக்கத் தொடங்கவே இல்லை. ஆனால், அக்கட்சியில் இருக்கும் சில 'அல்லுசில்லுகள்' தேவையில்லாமல் பாஜகவையும், எங்கள் தலைவர்களையும் விமர்சித்து வருகிறார்கள். 3, 4 கட்சிகள் மாறிவிட்டு வந்தவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எங்களை வீணாகச் சீண்டினால் அதற்கானப் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க: விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுபவர்களுக்குக் காலம் பதில் சொல்லும். இனிவரும் காலங்களில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தவெக-வின் செயல்பாடுகளை நான் முறைப்படி விமர்சிக்கத் தொடங்குவேன். எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சர் ஆக்குவதுதான் எங்கள் இலக்கு என்று நான் சொன்னால், அதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் வருகிறது? "தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள எங்களை விமர்சிப்பவர்களுக்குத் தமிழக மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தவெக நிர்வாகி நிர்மல்குமார் உள்ளிட்டோர், அண்ணாமலை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்குப் பதிலடியாக அண்ணாமலையின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. குறிப்பாக, பாஜக - அதிமுக கூட்டணியை தவெக கடுமையாகச் சாடி வருவதால், ராயப்பேட்டை மற்றும் கமலாலயம் தரப்பிலிருந்து தவெக-வுக்கு எதிரானத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க: முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....!  தவெக அருண்ராஜ் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share