தோட்டத்து வீடுகளே டார்கெட்..! நகைக்காக கொடூர கொலைகள்.. ஐ.ஜி செந்தில்குமார் பரபர பிரஸ்மிட்!
சிவகிரி இரட்டை கொலை செய்தவர்களே பல்லடம் மூவர் கொலைக்கும் காரணம் என மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சிவகிரி, பல்லடம் கொலைகள் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பூர் பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாய், தந்தை மகன் நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டதாகவும், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தோட்டத்து வீடுகளை குறிவைத்து நகைக்காக அரங்கேறிய கொலைகள் என விசாரணையில் அம்பலமாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் கைதான மூவருக்கும் மேலும் பல குற்றங்களிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூவரும் பிடிபட்டுள்ளனர் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு இரட்டை கொலை.. அடுத்தடுத்த கைது..! திடுக்கிடும் தகவல்கள்..!
கொலைக்கு மரக்கட்டைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளதாகவும், திருடி எடுத்துச் சென்று உருக்கப்பட்ட நகை, இரு சக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். திருடிய நகைகளை உருக்கி தருமாறு நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனிடம் கொடுத்துள்ளனர் என்றும் சிவகிரி கொலை தொடர்பாக 60 கிலோ மீட்டர் வரை உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். பல்லடம் மூவர் கொலையையும் தங்களை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு இரட்டை கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்..!