#BREAKING: ஐ.ஜே.கே. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?... பாரிவேந்தர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து பார்வேந்தர் அறிவித்தார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐ.ஜே.கே) இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட சம்பவம் அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த ஒதுக்கீடு கூட்டணியின் உள் பேச்சுவார்த்தைகளின் விளைவாக உருவானது மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்தத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், மீதமுள்ள 65 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!
இந்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்களை பாரிவேந்தர் அறிவித்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் வெங்கடேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் சரண்யா அன்பழகன் போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதி வேட்பாளர்களின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!