×
 

விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!

விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என ttv தினகரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முதன்மையான இழுபறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிலவுகிறது. பாஜக தமிழகத்தில் தனது தேர்தல் இருப்பை வலுப்படுத்த விரும்புவதால், கடந்த தேர்தல்களை விட கணிசமாக அதிக தொகுதிகளை கோரி வருகிறது. பாஜக 45 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும், ஆனால் அதிமுக அதை ஏற்க மறுப்பதாகவும் தெரிகிறது. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும், மொத்தமாக சில சிறிய கட்சிகளுடன் சேர்த்து 38 வரை செல்லலாம் எனவும் பேச்சுகள் நடைபெறுகின்றன.

ஆனால் இதில் இறுதி ஒப்புதல் இன்னும் எட்டப்படவில்லை.பாமக, அமமுக போன்ற கூட்டணி கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கோரி வருகின்றன. பாமக ஏற்கனவே அதிமுகவுடன் தனி ஒப்பந்தம் செய்துகொண்டு 18 முதல் 23 தொகுதிகள் வரை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அம்முகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என பேச்சுகள் உள்ளன. 

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் பலம் பெற வேண்டும் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பாஜகவும் பழனிசாமியும் முடிவு செய்வர் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

இதையும் படிங்க: சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share