×
 

அடேங்கப்பா...!! ஒரு கிலோ உப்பு இவ்வளவு விலையா?... அப்படி என்ன ஸ்பெஷல்?

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது.

கரூரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தினர் கார்த்திகை தீபத்திற்குப் பிறகு 21 நாட்கள் பிள்ளையார் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். இது உலகளாவிய சமுதாய நோன்பாகும். இதில் விநாயகர் வழிபாடு, பால், கருப்பட்டி, பனியாரம், கடலை உருண்டை, எள் உருண்டை, திரட்டுப்பால் போன்ற பலகாரங்கள் படைத்தல், மங்களப் பொருட்களை (உப்பு, தேங்காய் போன்றவை) ஏலம் விடுதல், கூட்டு வழிபாடு என உற்சாகமாக நடைபெறும், இது சமுதாய ஒற்றுமையையும், உறவுகளின் மேம்பாட்டையும் குறிக்கும். 

கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழாவானது 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ள 
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த 200 பேருக்கும் ஏலம் எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர்.

தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, குழந்தை சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் சிலை உள்ளிட்ட 18 மங்கள பொருட்களை சமூக நிதித் திரட்டலுக்காக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தினை செயலாளர், மேலை பழநியப்பன் நடத்தினார். 

இதையும் படிங்க: தர்மபுரியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... மளிகை கடைக்காரருக்கு லாடம் கட்டிய போலீஸ்...!

இந்த ஏல நிகழ்ச்சியில் ருசிகரமாக 1 கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கும், மணமாலை 10,001 ரூபாய்க்கும், மஞ்சள் 7,501 ரூபாய்க்கும், நாட்டு சர்க்கரை 7,000 ரூபாய்க்கும், விநாயகர் சிலை விக்ரகம் 9,000 ரூபாய்க்கும், குங்குமம் 4,000 ரூபாய்க்கும், ஆண் குழந்தை சட்டை 10,001, தேங்காய் ஒரு ஜோடி 5001 ரூபாய்க்கும், ஸ்கூல் பேக் 10,000, பிளாஸ்டிக் வீடு 10,001 ரூபாய்க்கு என மொத்தம் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

இதையும் படிங்க: “கூட்டணி பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது... மீறினால்”... அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு பகிரங்க எச்சரிக்கை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share