“கூட்டணி பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது... மீறினால்”... அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு பகிரங்க எச்சரிக்கை...!
பாமகவுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது என பாமக சமூகநீதிப் பேரவை என்ற பெயரில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாமகவில் அப்பா - மகன் இடையிலான உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வரும் வரும் 29-ஆம் தேதி பாமக-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நேற்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மன் அளிக்கப்பட்டது.
அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக உச்ச நீதிமன்றமே அன்புமணி ராமதாஸை அங்கீகரித்துள்ளதால், அவரைத் தவிர வேறு யாருக்கும் சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை என்றும், எனவே ராமதாஸ் தரப்பில் நடத்தப்படும் கூட்டத்தை அனுமதிக்கவோ, பாதுகாபு தரவோக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், கொடி மற்றும் அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளர் அலுவலகத்தில் முறையிடப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு பாமக பெயரில் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அன்புமணி நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாமக சமூக நீதி பேரவை பெயரில் பொது அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை அன்புமணி தரப்பு நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் போன்ற தலைவரை கொச்சைப்படுத்தலாமா? கொந்தளித்த ஜி.கே. மணி…!
பாமக தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர் கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும், அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜி.கே.மணி தொகுதியில் அன்புமணி போட்டி?! மல்லுக்கட்டும் தொண்டர்கள்!! பாமக-வில் மோதல் உச்சக்கட்டம்!