×
 

நாடு முழுவதும் 400 இடங்களில் ரெய்டு... சென்னையில் 2வது நாளாக தொடரும் சோதனை... பரபரப்பு பின்னணி...!

இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தொகை வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் தொடர்பாகத்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு தழுவிய அளவில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தொகை வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் தொடர்பாகத்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு தழுவிய அளவில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, போலி தொண்டு நிறுவனங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடைகளுக்கு பதிலாக சட்டவிரோத பணத்தைப் பரிமாற்றம் செய்யக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்ட நெட்வொர்க் ஒன்றை வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கிறது.

இதையும் படிங்க: இடதுசாரிகளின் பெயர், முகவரியை சேகரிக்க செல்வதா..? திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கண்டனம்..!!

அதன் தொடர்ச்சியாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பெருமளவில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான பல நிறுவனங்கள் மற்றும் நபர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய பல நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவையாகவோ அல்லது மிகக் குறைந்த வருமானத்தைக் காட்டியவையாகவோ இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் அளித்த முகவரிகளில் அந்த நிறுவனங்கள் செயல்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கப்பல் போக்குவரத்துக் கட்டணம், மென்பொருள் இறக்குமதி மற்றும் ஆலோசனைக் கட்டணம் ஆகிய காரணங்களைக் கூறியே இவர்கள் பணத்தை அனுப்பியுள்ளனர். ஆனால், அனுப்பப்பட்ட தொகைகளுக்கும் அந்த நிறுவனங்களின் உண்மையான செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாகத்தான் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு போலி நிறுவனங்கள், அவற்றின் பின்னணியில் இருக்கக்கூடிய நபர்கள் மற்றும் முறையாக சான்றிதழ் அளித்த தணிக்கையாளர்கள் ஆகியோரைக் குறிவைத்து தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

394 நிறுவனங்கள் மற்றும் 37 ஆடிட்டர்களிடம் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 4 நிறுவனங்கள் தொடர்பாக 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் மட்டும் இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், எவ்வளவு வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share