மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!
இன்று அதிகாலை கொல்கத்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த தீ விபத்தில் சிக்கி வங்க தேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கொல்கத்தாவில் உள்ள பரபரப்பான மற்றும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கக்கூடிய பகுதியான நியூ மார்க்கெட்டிற்கு அருகே ஃப்ரீ ஸ்கூல் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை சுமார் 2மணி அளவில் தீப்பற்றிய நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பேரிடர் மேலாண்மைக் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் இணைந்தது.
தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தினுள் சிக்கியிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு, இறுதியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அடர்த்தியான புகை காரணமாக, தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமானதாகவும், கால தாமதத்திற்கு காரணமாகவும் அமைந்தது. இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!
தீயணைப்புத் துறையின் கூற்றுப்படி, தீ விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா சென்றிருந்த வங்கதேச நாட்டவர்கள் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் கண்டிஷனர் வெடித்ததால் தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் அதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மற்றொரு அதிர்ச்சி சம்பவம்:
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட மற்றொரு கொடூரமான தீ விபத்து நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கொல்கத்தா ஹோட்டலில் இந்தத் தீ விபத்து நடந்துள்ளது . ஆகஸ்ட் 17 அன்று அதிகாலை தாராபீத்தில் உள்ள ஹோட்டல் பிதேஷினியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஐந்து மாடி ஹோட்டலின் தரைத்தளத்தில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டல், தாராபீடக் கோயிலுக்கு அருகிலுள்ள புனிதக் குளத்தின் அருகே அமைந்துள்ளது.
மேகாலயாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தீ விபத்தில் உயிரிழந்தனர். தகவல்களின்படி, அந்தக் குடும்பம் ஹோட்டலின் மேல் தளத்தில் தங்கியிருந்தது. தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள், குழந்தைகளுடன் தப்பிச் செல்ல முயன்றபோது, கீழே இறங்க முயன்ற வேளையில் தீப்பிழம்புகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?