×
 

#BREAKING தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு குறி... சென்னை, மதுரையை சுத்துப்போட்ட வருமான வரித்துறை... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

சென்னை மற்றும் மதுரையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களைக் குறிவைத்து, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள பிரபல செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு, பெரம்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில், போலீஸ் பாதுகாப்புடன் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பலவற்றிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் மதுரையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களைக் குறிவைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், மதுரவாயல், மாதவரம், வேளச்சேரி, பெரம்பூர், அடையாறு, தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களைக் குறிவைத்தே இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மலேரியா தடுப்பு மாத்திரை சாப்பிட்ட 71 பேர் பாதிப்பு… 7 வயது சிறுமி உயிரிழப்பு! ஆந்திராவில் அதிர்ச்சி

குறிப்பாக, வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் இதுபோன்ற கருத்தரிப்பு மையங்களில் எத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அது தொடர்பான ஆவணங்கள் என்ன என்பது குறித்து தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சரியாக வருமானத்தைக் கணக்குக் காட்டி வரி செலுத்தியிருக்கிறார்களா? அல்லது வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தற்போது வருமான வரித்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை நிறைவடைந்த பின்னரே, இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா? எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது? உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்! பாஜக மெகா பிளான்! வாட்நகரில் இருந்து வாரணாசி வரை அடுத்தகட்ட திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share