×
 

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்! பாஜக மெகா பிளான்! வாட்நகரில் இருந்து வாரணாசி வரை அடுத்தகட்ட திட்டம்!

மோடியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்திலும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் யாத்திரைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பாஜக நிர்வாகிகள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. குஜராத் முதல்-மந்திரியாகவும், பின்னர் பிரதமராகவும் நீண்ட காலம் பணியாற்றியதை முன்னிறுத்தி இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரமாண்டமாக நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 17-ந்தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதன் ஒரு பகுதியாக ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத் மாநிலம் வாட்நகரில் இருந்து அவர் மக்களவை உறுப்பினராக இருக்கும் வாரணாசி தொகுதி வரை மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் சேவா ஜோதி யாத்திரை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய இரு இடங்களில் இருந்தும் ஒரே நாளில் இந்த யாத்திரைகள் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணம் செய்து, சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் தங்களது இலக்கை சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

யாத்திரையின்போது தினமும் சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க கட்சி திட்டமிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இந்த பிரசாரப் பயணம் நடைபெற உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களுக்காக நாடு முழுவதும் ஓவிய மற்றும் பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகள் திருச்சியில் ஆலோசனை நடத்தினர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக மேலிட பொறுப்பாளர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பிரத்யேக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மோடியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்திலும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் யாத்திரைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பாஜக நிர்வாகிகள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share