முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!
இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, தமிழக முதலமைச்சரைச் சந்தித்துக் கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியக் கடலோரக் காவல் படையின் (ICG) தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களைச் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த உயர்நிலைச் சந்திப்பின்போது, தமிழகத்தின் நீண்ட நெடிய கடலோரப் பகுதிகள் மற்றும் சர்வதேசக் கடல் எல்லையில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது, நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, அவசரக் கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை! வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!
அண்டை நாடுகளின் அத்துமீறல்களைத் தடுத்தல், கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதக் கடத்தல்களை முறியடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநில அரசும் கடலோரக் காவல் படையும் ஒருங்கிணைந்து இணைந்து செயல்படுவது குறித்தும் முதலமைச்சரிடம் கடலோரக் காவல்படைத் தலைவர் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பரந்தூருக்கு திமுக கவனம் செலுத்தியது ஏன்.? அறிக்கை வெளியிட தயாரா.? சிபிஎம் சண்முகம் கேள்வி.!!