இந்தி கத்துக்கிட்டால் தேசிய அளவில் கொடிகட்டி பறக்க முடியும் - தமிழக கபடி பயிற்சியாளர் சர்ச்சை கருத்து!
ஹிந்தி கற்றுக் கொண்டால் தமிழக விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் கொடிகட்டி பறக்கலாம் என மகளிர் கபடி அணியின் துணை பயிற்சியாளர் கவிதாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஆறாவது ஆசை மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியானது ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இது இறுதி வரை போராடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் ஈரான் நோட்டுடன் மோதியது. அதில் 32 - 25 என்ற கணக்கில் ஈரானை வழி அனுப்பி இந்தியா ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை 6-வது முறையாக வென்று சாதனை படைத்தள்ளது. இந்த நிலையில் வெற்றி பெற்று டெல்லி திரும்பிய இந்திய மகளிர் கபடி அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் கூடுதல் சிறப்பாக இந்த கபடிக்குழு அணியினரின் துணை பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா என்பவரும் உடன் சென்று இருந்தார். அப்போது கவிதா டெல்லியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆறாவது சாம்பியன்ஷிப் மகளிர் கபடி போட்டியில் பயிற்சியாளராக சென்று அணி வெற்றி பெற்று நாடு திரும்பியது பெரும் மன மகிழ்வை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இது மட்டும் இன்றி கவிதா இருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற பெருமைக்குரிய நம்பிக்கையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தி திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்... மு.க.ஸ்டாலின் கடிதம்..!
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு வீரர்களுக்கு என சிறப்பான வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருவதனால் பல்வேறு மாணவர்கள் விளையாட்டில் ஆர் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தன் என்னை பயிற்சியாளராக நியமித்ததன் மூலம் சர்வதேச தரத்தில் என்னால் பயிற்சிகளை வழங்க முடிகிறது என்று நன்றி கூறி, கபடி வீராங்கனையாக இருந்தபோது நான்கு முறை தங்க பதக்கம் வென்றுள்ளதாகவும் பெருமை கூறினார்.
அப்போது அவர் இந்திய கபடி அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கு இந்தி தெரிவதால் தான் நான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் இந்திய மகளிர் கபடி அணியில் அதிகப்படியானோர் வட இந்தியர்கள் தான் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீரர்களும் திறமை மிக்கவர்கள் என்றும் மொழி தெரியாததால் தான் அவர்களின் திறமை குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தேவைக்கு ஏற்ப மொழிகளை கற்றுக் கொண்டு விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றும் இங்கிருந்து செல்லும் திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் இந்தி மொழியையும் தெரிந்து கொண்டால் தேசிய அளவில் கொடிகட்டி பறக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது பல தரப்பு மக்களிடம் இருந்து பல்வேறு எதிர்மறை கருத்துக்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஹிந்தியை திணிக்க வேண்டாம்.. திருச்சியில் அதிரடி காட்டிய ரவி பச்சைமுத்து..!