×
 

சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

சாலையில் அதிவேகமாக சென்றதற்காக இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகப் போக்குவரத்துப் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

ராஞ்சியில் உள்ள கான்கே ரிங் ரோடு (Kanke Ring Road) பகுதியில், பிர்சா வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தோனியின் கார் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பைத் தாண்டிச் சென்றுள்ளது. அந்தச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு 60 கி.மீ/மணி ஆகும். ஆனால், தோனியின் கார் இந்த வரம்பை மீறி அதிவேகமாகச் சென்றதை அங்கிருந்த தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு (ATMS) கேமராக்கள் படம் பிடித்தன.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ், தோனிக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டு, அவரது மொபைல் எண்ணிற்கு e-Challan அனுப்பப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காகச் சென்னை புறப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: மான நஷ்ட வழக்கு... 12 ஆம் தேதி வரைக்கும் டைம்..! ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு..!

சமீபத்தில் ராஞ்சியில் உள்ள அவரது பழைய வீட்டை (ஹார்மு ரோடு) குடியிருப்பு நோக்கத்திற்காக அல்லாமல், வணிக ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share