நேற்றும் இருந்தோம்! நாளையும் இருப்போம்! திமுக-விற்காக ஐயுஎம்எல் வெளியிட்ட அதிரடி பதிவு!
இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக போன்றவை தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இக்கட்டான சூழலில், திமுக-வை விட்டு விலகப்போவதில்லை என IUML அறிவித்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!! என ஐயுஎம்எல் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து தனது நிலைபாட்டை
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான தொங்கு சட்டமன்றச் சூழலில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இத்தகைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும், திமுக-வுடனான தனது விசுவாசத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக விஜய்யின் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஐயுஎம்எல் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் ஒரு உருக்கமான மற்றும் வலிமையான பதிவை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!
நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!!" என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து திமுக-வுடனான தங்களது நீண்டகால நட்பு எக்காலத்திலும் மாறாது என்பதை இக்கட்சி இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளே தற்காலிக ஆட்சி அமைப்பிற்காகத் தவெக பக்கம் சாய்ந்துள்ள நிலையில், ஐயுஎம்எல்-இன் இந்தப் பதிவு திமுக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ், விசிக, மற்றும் இடதுசாரிகள் தவெக-விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளதால், சட்டமன்றத்தில் திமுக-வின் பலம் சற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போலத் தோன்றினாலும், ஐயுஎம்எல் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் இப்போதும் திமுக-வின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றன.
ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இதே வேளையில், ஐயுஎம்எல் கட்சி வெளியிட்டுள்ள இந்த நிழலாய் தொடர்வோம் எனும் செய்தி, தமிழக அரசியலில் கூட்டணி தர்மம் குறித்த புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் - ஆளுநர் அர்லேகர் அதிரடி!