2026 ஜல்லிக்கட்டு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழர்களின் வீரமும் பாரம்பரியமும் செறிந்த விளையாட்டுதமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. இது ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருது விடுதல் என்றும் அழைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கலில் கொண்டாடப்படும் இந்த விழா, தமிழர்களின் வீரத்தையும், விவசாய வாழ்வையும், மாடுகளுடனான உறவையும் பிரதிபலிக்கிறது. சங்க காலம் தொட்டு நீண்ட வரலாறு கொண்ட இந்த விளையாட்டு, இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் அடையாளம். வீரம், தைரியம், இயற்கையுடனான இணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் நடக்கும் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை.
2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பள்ளி கட்டடம் இடிந்து மாணவர் பலி! இது விபத்து அல்ல! திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை: அண்ணாமலை!
காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் காளைகள், கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கா? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK...!