தமிழ்நாட்டில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கா? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK...!
தமிழகத்தில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கும் நிலையில் புதிதாக ஹஜ் எல்லாம் கட்டப்படுவதாக வெளியான தகவல் பொய் என தமிழ்நாடு தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுவதற்கான அறிவிப்பை 2025 மார்ச் மாதம் வெளியிட்டார். இது ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு முக்கியமான அறிவிப்பாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய போது, முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சென்னை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள நங்கநல்லூரில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சென்னை விமான நிலையம் அருகே இன்று ஹஜ் இல்லம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.39.20 கோடியில் 400 பேர் வரை தங்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கும் நிலையில் புதிதாக ஹஜ் எல்லாம் கட்டப்படுவதாக வெளியான தகவல் பொய் என தமிழ்நாடு தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடத்தி வருவதாகப் பரப்பப்படுவது திரிக்கப்பட்ட தகவல் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு புதிய ஹஜ் இல்லம் கட்டுவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளது. சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுவதில்லை என்றும் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி என்ற தனியார் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிலை இடித்து கோரிப்பாளையம் தர்கா கட்டப்பட்டதா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK..!
சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ள ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் கட்டப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் மாணவியை கொன்றது பட்டியலின இளைஞனா? உடைந்த உண்மைகள்...!