×
 

#BREAKING: சிக்கி தவிக்கும் ஜனநாயகன்... காரசார வாதம்.. தீர்ப்பு எப்போது?

ஜனநாயகன் பட தணிக்கை சான்று வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. ஆனால், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

அப்போது தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தணிக்கை சான்று விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் படக்குழு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. 

இதையும் படிங்க: விஷயமே வேற..! பராசக்தி படத்தில் கருத்து முரண்பாடு... குண்டை தூக்கி போட்ட MP விஜய் வசந்த்..!

 ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கூறிய வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் வாத பிரதிவாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர். அப்போது காரசார வாதம் நடந்த நிலையில் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். சான்றிதழ் வழங்க அதிகாரம் யாருக்கு உள்ளது? புகாரை அடுத்து சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னவர் யார்? என பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

இதையும் படிங்க: கரூர் விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம்!! சிபிஐ விசாரணையில் பற்ற வைத்த விஜய்!! கசிந்தது புது தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share