×
 

சிக்கலில் ஜனநாயகன்... சென்சார் சான்று கிடைக்குமா? ஹைகோர்டில் விசாரணை தொடக்கம்..!

ஜனநாயகன் பட தணிக்கை சான்று வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது..

விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டது.  இப்படம் அவரது திரைப்பயணத்தின் மைல்கல்லாக கருதப்படுகிறது. ஆனால்,  மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. ஆனால், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தணிக்கை சான்று வழங்கலாம் என தனி நீதிபதிய அமர்வில் தீர்ப்பு வெளியானது. 

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தணிக்கை சான்று விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் படக்குழு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. 

இதையும் படிங்க: தவெகவில் அடுத்தடுத்து அவமானங்களால் செங்கோட்டையன் அப்செட்!! எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?!

இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கூறிய வழக்கின் விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தணிக்கை சான்று வேண்டும் என்று கேட்டதற்கு அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: தத்தளிக்கும் தவெக... கேள்விகளால் துளைத்த சிபிஐ..! விஜயிடம் 5 மணி நேரம் விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share