ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது என்று ரஜினிகாந்த் எச்சரிக்கை.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் ஜன நாயகன் (Jana Nayagan), சென்சார் சிக்கல்களால் திரையரங்குகளில் வெளியாகத் தாமதமாகி வரும் நிலையில், அந்தப் படம் முழுமையாக இணையத்தில் கசிந்திருப்பது திரைத்துறையினரிடையே பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டவிரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் உருக்கமான மற்றும் ஆவேசமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது எனத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பல நூறு கோடி முதலீட்டில் உருவான ஒரு படைப்பு, இவ்வாறு திருடப்படுவது ஒரு கலைஞனாக அவரைப் பெரிதும் பாதித்துள்ளதை அவரது வார்த்தைகள் காட்டுகின்றன.
இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை அரசு சும்மா விடக்கூடாது என வலியுறுத்திய அவர் திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனத் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் சினிமா அல்ல, பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது - விஜய் குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்!
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் பொங்கல் 2026 வெளியீட்டைத் தவறவிட்டது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 09) இரவு இணையத்தில் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் மற்றும் சில இடங்களில் முழுத் திரைப்படமும் கசிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்தைத் தொடர்ந்து, நடிகர்கள் சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன் மற்றும் குஷ்பூ சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த டிஜிட்டல் திருட்டைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஒரு நடிகரின் கடைசிப் படத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இது குறித்துத் தடயவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, லீக் செய்யப்பட்ட வீடியோவைப் பகிர்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!