×
 

நான் என்ன தப்பு செஞ்சேன்... ஏன் கைவிட்டீங்க..! ஜெயக்குமார் ஆதங்கம்..!

ராயபுரம் தொகுதியில் தன்னை ஏன் கைவிட்டீர்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசியலில் நீண்டகாலமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெயக்குமார். சென்னையின் இராயபுரம் தொகுதியைச் சேர்ந்த இவர், அதிமுகவின் விசுவாசமான தொண்டராகவும், பல முறை அமைச்சரவை பதவிகளை வகித்தவராகவும் அறியப்படுகிறார். அவரது அரசியல் பயணம் 1980களின் இறுதியில் தொடங்கியது.

அப்போது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கட்சியில் இணைந்ததிலிருந்து அவரது வாழ்க்கை அரசியலுடன் இணைந்துவிட்டது. ஜெயக்குமார் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்த அந்தத் தேர்தலில் இராயபுரம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். அப்போது கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலன் போன்ற துறைகளை கவனித்த அமைச்சராக பொறுப்பேற்றார்.

இளம் வயதிலேயே அமைச்சர் பதவி கிடைத்தது அவரது கட்சிக்குள் இருந்த நம்பிக்கையையும், திறமையையும் காட்டுகிறது. அதன் பிறகு 2001ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, ஜெயக்குமார் சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் போன்ற முக்கியத் துறைகளை கையாண்டார். 2006இல் திமுக ஆட்சி அமைந்தபோது எதிர்க்கட்சியில் இருந்தாலும், 2011இல் மீண்டும் அதிமுக வெற்றி பெற்றபோது ஜெயக்குமார் இராயபுரம் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்றார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஜெயக்குமார், ஜெயலலிதா தலைமையில் மீன்வளத் துறை அமைச்சரானார்.

இதையும் படிங்க: SADDIST DMK.. மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு..! அதிமுக கொந்தளிப்பு..!

2021 தேர்தலில் இராயபுரத்தில் தோல்வியடைந்தாலும், கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் குழுக்களில் தொடர்ந்து இருக்கிறார். 2021-ம் ஆண்டு தேர்தலில் ஏன் தன்னை கைவிட்டு விட்டீர்கள் என ஜெயக்குமார் கேட்டுள்ளார். கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நான் என்ன தவறு செய்தேன் என்றும் ஊரை அடித்து உலையில் போட்டேனா, கட்ட பஞ்சாயத்து பண்ணேனா, கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனா அல்லது அடாவடித்தனம், பண்ணி பொறுக்கித்தனம் செய்தேனா என கேட்டு உள்ளார். அதுபோன்று என்றைக்கும் அ.தி.மு.க. கிடையாது என்றும் ஜெயக்குமாரும் கிடையாது எனவும் கூறிய ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன் என்றும் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான் எனவும் கூறினார். 

இதையும் படிங்க: தொங்கியது இபிஎஸ் தலை தான்... திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கு... சேகர்பாபு பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share