×
 

அலங்கார ஊர்தியை ரசிக்கும் முதல்வரே மக்கள் வேதனையை கண் தொறந்து பாருங்க..! ஜெயக்குமார் காட்டம்..!

மக்கள் வேதனைகளை முதலமைச்சர் கண் திறந்து பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

காமராஜர் சாலையில் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பல்வேறு தரப்பினர் போராடி வந்தனர். தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள் என ஏராளமானோர் போராடி இருந்தனர். இன்று நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த இரு சம்பவங்களையும் விட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தங்களுடைய உரிமைகளுக்காக போராடிய தூய்மை பணியாளர்கள்,இடைநிலை ஆசிரியர்கள்‌ மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல கட்டப் போராட்டகாரர்களை குண்டர்களை போல வைத்து கைது செய்த இடம் காமராஜர் சாலை என்று தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க தினந்தோறும் கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இடம் காமராஜர் சாலை என்று கூறினார்.  இன்று அதே காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் என்று கூறிய ஜெயக்குமார், அரசின் சாதனைகள் அலங்கார ஊர்தியாக வருவதாக எண்ணி முதலமைச்சர் ஸ்டாலின் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாரிசுகளுக்கே முதல்வர் பதவி? இதுவா குடியரசு? பணநாயகம் மறைந்து ஜனநாயகம் வெல்ல சீமான் வாழ்த்து..!

மக்களின் வேதனைகளையும் சற்று கண் திறந்து பாருங்கள் என ஜெயக்குமார் கூறியுள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காமல் அப்பட்டமான அதிகார மீறலில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது அரசியலமைப்பு வகுத்து கொடுத்த வழிகளை ஆட்சியாளர்கள் உணர்ந்து அறவழியில் நடக்க வேண்டும்‌ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீரர்களை கொடுத்த தஞ்சை மண்..! மாலை சந்திப்போம்... திமுக மகளிர் அணி மாநாட்டுக்கு முதல்வர் அழைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share