×
 

வாரிசுகளுக்கே முதல்வர் பதவி? இதுவா குடியரசு? பணநாயகம் மறைந்து ஜனநாயகம் வெல்ல சீமான் வாழ்த்து..!

நாட்டில் பணநாயகம் மறைந்து ஜனநாயகம் வளரட்டும் என சீமான் குடியரசு தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பணநாயகம் மறைந்து ஜனநாயகம் மலரட்டும் என குடியரசு தின நாளில் சீமான் தெரிவித்துள்ளார். மன்னராட்சி மறைந்தது., மக்களாட்சி மலர்ந்தது என்பதை ஏட்டளவில் மட்டும் எழுதி வைத்த குடியரசு திருநாள் இன்று என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கொடுங்கோன்மை அடக்குமுறை கொள்ளை போகும் கனிமவளம் துறை தோறும் ஊழல் இலஞ்சம் எதிர்த்து கேட்டால் தேசத்துரோகம் தடுக்க நினைத்தால் குண்டர் சட்டம்., ஆனாலும் இந்த நாடு ஆகிவிட்டது குடியரசு என்று தெரிவித்தார்.

மலிவு விலை மதுக்கடையில் அரசாங்கமே மது விற்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்காது ஊக்குவிக்கும் சீரழியும் இளந்தலைமுறையை சிந்திக்காத கொடிய அரசு ஆனாலும் இந்த நாடு ஆகிவிட்டது குடியரசு என்று குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரம் கோடி கடனாளி சொகுசாக வெளிநாட்டில், பயிர் வைக்க கடன் வாங்கி விவசாயி உயிரிழப்பதாகவும் ஏற்றத்தாழ்வு குறையவில்லை ஏதும் மாற்றம் நிகழவில்லை., ஆனாலும் இந்த நாடு இது குடியரசு நாடு என்றும் விமர்சித்தார். 

வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்று முரசு கொட்டும் என்றும் அம்பானிக்கும் அதானிக்கும் கூடுதல் சலுகை காட்டும் எனவும் தாங்க முடியாத வரி விதித்து நாட்டு மக்களை ஒழித்துக்கட்டும் ஆனாலும் இந்த நாடு குடியரசு ஆகிவிட்டது என்று கூறினார். பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், பள்ளிக்கூட சிறுமிகளுக்கும் பாலியல் கொடுந்தொல்லைகள், வேடிக்கை பார்க்கும் கொடிய அரசு ஆனாலும் இந்த நாடு குடியரசு நாடு என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீரர்களை கொடுத்த தஞ்சை மண்..! மாலை சந்திப்போம்... திமுக மகளிர் அணி மாநாட்டுக்கு முதல்வர் அழைப்பு..!

கடவுள் பெயரால் கலவரங்கள் மதத்தின் பெயரால் பிரிவினைகள் சாதிச்சண்டைகள் ஏராளம் சமய சண்டைகள் தாராளம் தூண்டிவிடும் கொடும் அரசு என்றும் ஓட்டுக்கு காசு கொடுக்கும் இலஞ்சம் மட்டுமே தேசிய மயம்., ஆயிரம் ஐநூறு இலவசம் தரும் ஊழல் மட்டுமே சட்ட மயம் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசி கொள்ளையடிக்க கூட்டு வைத்தால் அதன் பெயர் கொள்கை கூட்டணி என்று தெரிவித்தார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தால் மன்னராட்சி என்றும் சங்கம் வைத்து சாதி வளர்த்தால் மக்களாட்சி எனவும் வாரிசுகளுக்கே மன்னர் பதவி அது முடியரசு என்றும் வாரிசுகளுக்கே முதலமைச்சர் பதவி அது குடியரசு எனவும் சீமான் தெரிவித்தார்.

இக்கொடுமைகள் யாவும் நீங்கி, பணநாயகம் வீழ்ந்து சனநாயகம் வென்று  உண்மையான குடிகளின் அரசு விரைவில் மலர்ந்திட குடியரசு நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: வரமாட்டோம்..! ஆளுநர் விருந்தை புறக்கணிக்கும் தமிழக அரசு...! அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share