அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!
இன்றும் ஜெயலலிதா படம் எனது பாக்கெட்டில் இருக்கிறது. அவரது ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான எம்.எல்.ஏ-க்களின் போர்க்கொடி குறித்து, தமிழக அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது தூய்மையான மற்றும் வியக்கத்தகு ஆட்சி அமைய வேண்டும் என்ற இளைஞர்கள், மகளிர் மற்றும் குழந்தைகளின் நீண்ட நாள் கனவு தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் நனவாகியுள்ளது.
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழித்து, பணமே இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியும் என்ற புதிய அரசியல் வரலாற்றை முதலமைச்சர் விஜய் படைத்துள்ளார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றியது போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் இபிஎஸ்-க்கு எதிரான எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலடி அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை விடுத்துத் தனது படத்தை மட்டும் வைக்கச் சொன்னவரின் நிலை இன்று நாடே அறியும். தலைவர் மீதும் மக்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குச் சரிவு வருவது இயற்கை.
இன்றும் எனது பாக்கெட்டில் ஜெயலலிதா படம் தான் இருக்கிறது. அவரது படம் வேண்டாம் என்று நினைத்தவரின் கனவு இன்று தூள்தூளாகி விட்டது. ஜெயலலிதா அவர்களின் ஆத்மாதான் இன்று எடப்பாடி பழனிசாமிக்குத் தண்டனை கொடுத்துள்ளது என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!