×
 

விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி யாக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா  முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவது சாத்தியமில்லை என்றும் 152 அடி தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்று கேரளா ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளது  கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் எம்எல்ஏ வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ மன்னிப்பு கோர கோரிக்கை.

 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி யாக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி திண்டுக்கல் மதுரை ராம்நாடு சிவகங்கை மாவட்ட மக்கள் மற்றும் கால்நடைகளின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் விளங்குவதும் முல்லை பெரியாறு அணையாகும் .

இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

 முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை  பயன்படுத்தி ஐந்து மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் இது போக நெல் சாகுபடி விவசாயம் நடைபெறுகின்றது.

 முல்லை பெரியாறு அணை பலம் இழந்துவிட்டது என்று கேரளா அரசின் பொய்யான குற்றச்சாட்டால்  அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக 1978 ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது.

 இவனை எதிர்த்து தமிழக அரசும் விவசாயிகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகி 2017 ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக்கொள்ள   உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது மேலும் பேபி அணையினை பலப்படுத்திய பின்பு 152 அடியாக நீரினை தேக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது .

 இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளா ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததில் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்றும் 152 அடி தண்ணீர் தேக்க சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி கேரளா ஊடகங்களில் வெளியான தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு  அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற சூழ்நிலையில் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பேச்சு பெரும் கண்டனத்திற்கு உரியது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கேரளா மாநிலத்திற்கு சாதகமாக செயல்படுகிறாரா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் எம் எல் ஏ பேச்சுக்கு மன்னிப்பு  கேட்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழக முதல்வர் விஜய் ஜோசப் அவர்கள் முல்லைப் பெரியாறு அணை விவசாயத்தில் பிரச்சனைகள் நேரடியாக தலையிட்டு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் ஐந்து மாவட்ட மக்களின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

இதையும் படிங்க: விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share