நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!
நீட் மறு தேர்வு மன உளைச்சலால் கோபிகா என்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் மறு தேர்வு மன உளைச்சலில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அனுமதிக்கான மிக முக்கியமான தேர்வான NEET UG 2026, மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தக் கசிவு டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளை மையமாகக் கொண்டு இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே telegram போன்ற சமூக ஊடகங்களில் பரவியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழுக்களில் உறுப்பினர்கள் 400க்கும் மேல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நெட்வொர்க் செயல்பட்டதாக சந்தேகம் எழுந்தது. வினாத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டெலிகிராம் வழியாக பணம் பெற்று பகிரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்தக் கசிவு குறித்த புகார்கள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் எதிரொலித்தன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 12, 2026 அன்று தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. மத்திய அரசின் ஒப்புதலுடன் CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!
ஏற்கனவே நீட் தேர்வு எழுதி இருந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் ஏற்கனவே நீட் மறு தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த காயம் ஆறுவதற்குள் மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நீட் மறுதேர்வு நடைபெற இருக்கும் சூழ்நிலையில் மன அழுத்தம் ஏற்பட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வை கோபிகா எழுதியுள்ளார். அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறு தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!