புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?
புதுக்கோட்டையில் 137 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 137 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
துணிகரக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்களை உடனடியாக பிடித்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அறந்தாங்கி நகரின் முக்கிய பகுதியில் அப்துல்ஹமீது தெரு உள்ளது. இங்கு ஹாஜாநஜிமுதீன், கிரீன்முகமது ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகைக்காக சொந்தமான 2 ஹாஜாநஜிமுதீன், கிரீன்முகமது ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சிறப்பு தொழுகைக்கு சென்றுள்ளனர். அப்போது சமயம் பார்த்து காத்திருந்த மர்ம நபர்கள் பூட்டியிருந்த 2 வீடுகளின் கதவை உடைத்து உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 137 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அய்யோ தங்க மனசுய்யா..!! மூன்றரை சவரன் பிரேஸ்லெட்டை ஒப்படைத்த இளநீர் வியாபாரி.!!
தொழுகைக்கு சென்று வீடு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை நகரின் முக்கியமான தெருவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக கொல்லவர்களை கைது செய்து நகைகளை இனிப்பு தர வேண்டும் என்று உள்ளனர்.
இதையும் படிங்க: இனி ஒரே நாளில் டெலிவரி..!! அறிமுகமாகிறது புதிய சேவை..!! இந்திய தபால் துறை அசத்தல்..!!