நடுத்தர மக்கள் தலையில் இறங்கியது இடி... 9 காரட் நகை தயாரிப்பில் சிக்கல்... மத்திய அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை...!
9 கார்ட் தங்க நகைகள் சந்தைபடுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளுக்கு நாள் தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கத்தின் விலையால், ஏழை மக்கள் சிறிய அளவு தங்கம்கூட வாங்காத நிலையில் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜூன் மாதத்தில், உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோராக கருதப்படும் இந்தியாவில், தங்க விற்பனையில் 60 சதவீத சரிவு என பதிவாகியுள்ளது. இந்த நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகிழ்விக்கும் வகையில், இந்தியாவில், இனி 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களும் இனி குறைந்த விலையிலும் தங்க நகைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, ஹால்மார்க் செய்யப்பட்ட தூய்மைப் பொருட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் 14 காரட், 18 காரட், 20, 22, 23 மற்றும் 24 காரட் ஆகியவை அடங்கும். அந்தப் பட்டியலில் சமீபத்தில் 9 காரட் தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. 9 கேரட் தங்க நகையில், 37.5 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும். மீதமுள்ள 62.5 சதவீதம் தாமிரம், துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்களைக் கொண்டிருக்கும்.
24 காரட்டில் 99.9 சதவீத தூய தங்கமாக உள்ளது. அதாவது இதில் வேறு எந்த உலோகங்களும் இல்லை. 22 காரட் தங்க நகையில் 91.6 சதவீத தங்கம் உள்ளது. சுத்தமான 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1 லட்சம் என்றால், 9 காரட் தங்கம் 10 கிராம் ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.37 ஆயிரம் அளவில் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 20 கேமராக்கள், 115+ ஆடியோ ரிஸிவர்கள்... இளையராஜா பாராட்டு விழாவில் தமிழ்நாடு அரசு செய்த தரமான சம்பவம்...!
வரும் ஜன முதல் 9 காரட் தங்க நகைகள் விற்பனை வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் , அதே நேரத்தில் 9 தங்கநகைகளை உற்பத்தி செய்வதில் முறையான நெறிமுறைகள் இல்லாததாலும், சில சிக்கல் உள்ளதால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சந்தை படுத்த வேண்டும் நகைக் கடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துவெங்கட்ராமன் கூறும் போது : கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தரக்கட்டு மையத்தில் கூட்டத்தில், ஜன 1 ஆம் தேதி முதல் 9 காரட் தங்கம் விற்பனைக்கும், அதற்கு ஹால்மார்க் தரம் வழங்க உள்ளதாகவும், தயாராகி கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் இந்த நகைகளை தயாரித்து எங்களுக்கு பழக்கம் இல்லை என கூறினோம். 18 காரட் தங்க நகைகள் செய்து பழகவே நீண்ட நாட்கள் ஆனது.
குறைவான தங்கம் உள்ளதால் அதன் பாலிஸ் குறையாமல் இருக்க வேண்டும் அதற்கான மூலப்பெருட்களுடன் அலாய் செய்ய வேண்டும். பெரிய உற்பத்தியாளர்கள் எளிதில் தயாராகலாம் சிறு உற்பத்தியாளர்கள் கொஞ்சம் நேரம் பிடிபக்கும் எனவே கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார். மேலும் தற்போதைய 22 காரட் தங்க நகை விலையுடன் ஒப்பிடும் போது 9 காரட் விலை ரூ.50 ஆயிரம் குறைவாக இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்? டிடிவிக்கு வைத்தெரிச்சல்... வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்