×
 

நாகர்கோவிலில் துணிகரம்... 137 சவரன் நகையை ஆட்டையை போட்ட பலே கில்லாடிகள் !! துருவி துருவி விசாரணை..!!

நாகர்கோவிலில் 137 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் வீட்டில் பீரோவில் இருந்த 137 சவரன் நகைகள் திருட்டுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நகை திருட்டு குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில் பணியாட்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் ஜெயசாந்தினி. வீட்டில் இவரும் வயதான அவரது தந்தையும் மட்டும் வசித்து வருகின்றனர். ஜெய சாந்தினியின் மகள் சினேகா பிரசவத்திற்காக குளச்சலில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் மகளை ஜெயசாந்தினி மருத்துவமனையில் இருந்து கவனித்து வந்தார்.

வீட்டில் இருந்த ஜெய சாந்தினியின் தந்தையை பார்த்துக் கொள்வதற்காக வடசேரியை சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி வசந்தி மற்றும் அதேபகுதியை சேர்ந்த சுகுணா ஆகியோரிடம் ஜெயசாந்தினி சாவியை கொடுத்து இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த நகையை விற்று தனது மகளின் பெயரில் நிலம் வாங்குவதற்கு ஜெயசாந்தினி முடிவு செய்துள்ளார். இதற்காக வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த 137 சவரன் நகைகள் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொடூர கொலை... நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவு..!!

வீட்டில் இருந்த வேலையாட்களே இந்த நகைகளை திருடி இருக்கலாம் என கூறி ஜெயசாந்தினி வடசேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வேலையாட்கள் சசிகுமார் அவரது மனைவி வசந்தி மற்றும் சுகுணா ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 137 சவரன் நகைக்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: குமரியில் மினி டைடல் பார்க்..! சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு... அடிக்கல் நாட்டைய முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share