கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொடூர கொலை... நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவு..!!
கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை இலக்காகக் கொண்டு கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் இத்தகைய கொடூர சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளன. இவை சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன.
தனியாக வசிக்கும் வயதான பெண்கள், குறிப்பாக விதவைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் தொலைவில் இருப்பவர்கள், குற்றவாளிகளால் "எளிய இலக்கு" எனக் கருதப்படுகின்றனர். பெரும்பாலான சம்பவங்களில் கழுத்தை நெரித்தல், கத்தியால் குத்துதல், தடியால் அடித்தல் போன்ற கொடூர முறைகளில் கொலை செய்யப்பட்டு, காது, மூக்கு கிழித்து அல்லது நகைகளை பறித்து எடுக்கப்படுகின்றன.
சில சமயங்களில் வீட்டை தீ வைத்து அழித்து சாட்சிகளை மறைக்க முயல்கின்றனர்.சேலம், காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி. இவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் கை மற்றும் கால்களை கட்டி போட்டு கொலை செய்யப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!
கஸ்தூரியை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவர் ராம்குமார் இவரின் தாயார் ஆன கஸ்தூரி வீட்டில் தனியாக இருந்த இந்த கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வீட்டில் பணிபுரிந்த நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவாகி இருப்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் அந்த பணிப்பெண்ணை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!