×
 

பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தனது ஆட்சியின் ஆரம்ப நாட்களிலேயே டாஸ்மாக் கடைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்று, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் நுகர்வோரிடமிருந்து 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் பழக்கத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பது நீண்ட காலமாகவே பொதுமக்கள் மத்தியில் பெரும் புகாராக இருந்து வந்தது. இந்த கூடுதல் தொகை பெரும்பாலும் காலி பாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும் திட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், உண்மையில் அது ஊழியர்களின் தனிப்பட்ட வருமானத்துக்காகவோ அல்லது கடை நிர்வாக செலவுகளுக்காகவோ பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

முதல்வர் விஜய் அரசு பொறுப்பேற்ற உடனேயே இந்த முறைகேட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உடனடி சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

இதனிடையே, டாஸ்மாக் மது கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை கண்காணிக்க சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டாஸ்மாக்கை கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்க நுண்ணறிவு மற்றும் உளவுத்துறைக்கு சென்னை போலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டலுக்கு பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்க கூடாது என அரசு தரப்பில் உத்தரவிட்டு உள்ள நிலையில் தொடர்ந்து புகார் வருவதால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share