நசுக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்... ஜனநாயகம் நிலைத்திருக்காது! முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்!
பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தி வயர் செய்தி தளத்தை நிர்வகிக்கும் பவுண்டேஷன் ஃபார் இன்டிபென்டன்ட் ஜர்னலிசம் (Foundation for Independent Journalism) என்ற அறக்கட்டளை மற்றும் அதன் நிறுவனர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு, அசாம் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) தொடர்பாக எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு, பாரதிய நியாய சன்ஹிதாவின் 152-வது பிரிவின் அரசியல் சாசன செல்லுபடியை சவால் செய்யும் ஒரு மனுவுடன் இணைக்கப்பட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் ஊடகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கியமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
IAF Lost Fighter Jets to Pak Because of Political Leadership's Constraints Indian Defence Attache என்ற தலைப்பில், இந்தோனேசியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த கட்டுரை, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய விமானப்படை தொடர்பான சில உண்மைகளை வெளிப்படுத்தியது மற்றும் இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ பதிலையும் உள்ளடக்கியது.
இதையும் படிங்க: நாக்கை அடக்கி பேசுங்க பழனிச்சாமி.. இல்ல மக்கள் அடக்கிடுவாங்க! திமுக கண்டனம்..!
இதனிடையே, தி வயர் மூத்த பத்திரிகையாளர்களான வரதராஜன் புல்லட்டோருக்கு சம்மந்த அனுப்பிய அசாம் காவல்துறையின் நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கிய போதிலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் FIR இன் நகல் மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் கைது அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது என்றும் கூறினார். ரத்து செய்யப்பட்ட தேசத்துரோகச் சட்டத்திற்கு மாற்றாக, சுதந்திரமான பத்திரிகையை நசுக்க BNS இன் பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
இதையும் படிங்க: விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்கயா! விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க சீமான் வலியுறுத்தல்..!