×
 

ஊடகப் பணிக்கு ஊக்கமளிப்பதில் மகிழ்ச்சி! இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் பெருமிதம்..!

இதழியல் துறைக்கான கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் பயிற்சி வழங்குவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசு இந்த இதழியல் கல்வி நிறுவனத்தை நிறுவியதன் முதன்மை நோக்கம், திறமையான மற்றும் தொழில்முறை பத்திரிகையாளர்களை உருவாக்குவதாகும். இதழியல் துறையில் புதிய உயரங்களை எட்டுவதற்கு தேவையான அறிவு, திறன் மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2025-2026 கல்வியாண்டு முதல் ஒரு வருட முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Journalism) வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தப் படிப்பு, அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வைத்ததில் பெருமை அடைவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய் மச்சான்! உங்க அப்பன் கிட்ட கேட்டுப்பாரு திமுக- னா என்னனு! விளாசும் திமுகவினர்

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்தக் கல்வி நிறுவனத்தில் பத்து மடங்குக்கும் குறைவாகவே செலவாகும் என்று குறிப்பிட்டுப் பேசியது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார். மக்களாட்சியைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகப் பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் நமது அரசு செய்துள்ள இந்தப் பங்களிப்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இணைந்துள்ள மாணவர்கள், தங்களது கல்வியைச் சிறப்புற நிறைவு செய்ய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: கதறல் சத்தம் கேட்குதா "UNCLE"… திமுகவுக்கு பதிலடி போஸ்டர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share