×
 

#BREAKING சொந்த வீடு கட்டுபவர்களுக்கு குட்நியூஸ்.... கூடுதலாக ஒரு லட்சம்.. தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு...!

கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மானியத்துடன் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கூரையுடன் கூடிய புதிய வீடுகளை தமிழக அரசு கட்டி தந்து வருகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 2030ம் ஆண்டிற்குள் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத இலக்கை அடைய, தமிழக அரசு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்து மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் வசிக்கும் குடிசை இல்லாமல் ஓட்டு வீடுகளில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வீடு கட்டி வழங்குகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்... உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு... தங்கம் தென்னரசு சொன்ன டேட்டா...! 

கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மானியத்துடன் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கூரையுடன் கூடிய புதிய வீடுகளை தமிழக அரசு கட்டி தந்து வருகிறது.

ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு தரப்பிலிருந்து 3,50,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மூன்று நிலைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுதவிர கட்டுமானப் பணிகளுக்காக கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில், பயனாளிகள் வங்கிகள் மூலம் 1,50,000 ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக முதற்கட்டமாக, ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3500 கோடியை தமிழக அரசு ஒதுக்கி அரசாரணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வரும் சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரக பகுதிகளில் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது: 2030-ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகளை அமைத்து, குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டம், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும், மேலும் 29,000 வீடுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றும் வருகின்றன. இந்த திட்டம், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், கூடுதலாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அண்மையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், 2001 ஆம் ஆண்டு வரை அரசால் கட்டி முடிக்கப்பட்ட 114,488 வீடுகள் 969 கோடி ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டுபுனரமைக்கப்பட்டுள்ளன என்றார். 

இதையும் படிங்க: #BREAKING மகளிர் பணிபுரியும் இடங்களிலேயே குழந்தைகள் காப்பகம்... பெண்களுக்கு அடுத்தடுத்து மாஸான அறிவிப்புகள்....! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share