×
 

உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

மசினகுடியில் இருந்து உதகைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும் சீகூர் பாலம் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

கல்லட்டி மலை பாதையில் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்கள் பயணிக்க இன்று முதல் முழுவதுமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

இந்த மலை பாதையில் அதிக விபத்துகள் ஏற்பட்டதன் காரணமாக வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் உதகையிலிருந்து கல்லட்டி மலை பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உள்ளது. ஆனால் மசினகுடியிலிருந்து உதகைக்கு கல்லட்டி மலை பாதை வழியாக அனைத்து வாகனங்களும் வர அனுமதி வழங்கபட்டு இருந்தது. 

இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கல்லட்டி மலை பாதை வழியாக உதகைக்கு வந்தன. இந்நிலையில்  இபாஸ் முறையை முழுமையாக  அமல்படுத்த வேண்டும், கல்லட்டி மலை பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து சுற்று சூழலை பாதுகாக்க  சுற்றுலா வாகனங்களை மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க கூடாது என சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

இதையும் படிங்க: "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!

இதனை அடுத்து இன்று முதல் சுற்றுலா வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் தெப்பக்காடு பகுதியிலேயே கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போலிசார் அனுப்பி வருகின்றனர். 

மேலும் மசினகுடியில் இருந்து உதகைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும் சீகூர் பாலம் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாம போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share