"அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!
டிராபிக் சிக்னலில் விஜய் கார் நின்றபோது பெண்கள் கைகளை அசைத்துக் குஷியை வெளிப்படுத்தினர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஷீரடிக்கு புறப்பட்டார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய கார் டிராபிக் சிக்னல் என்ற போது அதனை கவனித்த பெண்கள் விஜய் அண்ணா எங்களை பாருங்கள் என்று துள்ளி குதித்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், அடுத்ததாக தேதி சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பின்னர், சாலை மார்க்கமாக கோவிலை அடைந்த அவர், அங்கு அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் அவருக்கு புனித வேல் ஒன்றைப் பரிசாக அளித்து கௌரவித்தது. பெரும் பக்தர் கூட்டம் அவரைப் பார்க்க குழுமியிருந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடுத்ததாக விஜய் சீரடிக்கு செல்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் அகிலிய நகர் மாவட்டத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புறப்பட்டார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!
சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலமாக சீரடி செல்லும் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடைய கார் டிராபிக் சிக்னலில் நின்றுள்ளது. அதனை மற்றொரு வேனில் இருந்த பெண்கள் கவனித்த நிலையில், விஜய் அண்ணா எங்களை பாருங்க., என்று கைகளை அசைத்து துள்ளி குதித்தனர். விஜயை பார்த்ததும் செய்வதறியாது வானில் இருந்து அவரது காரையே உற்று நோக்கி குஷியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல் முடிவுகள்..! அடுத்தடுத்த ஆன்மீகப் பயணம்..! சீரடிக்கு புறப்பட்ட விஜய்..!