×
 

தேரோட்டம் ரத்து... கோஷ்டி மோதலால் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு... ஆவேசத்தில் கிராம மக்கள் செய்த காரியம்...!

அனுமதியின்றி பாரத நிகழ்ச்சியை நடத்திய 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து அடுப்பு வைத்து பால் காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

சங்கராபுரம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் மாரியம்மன் கோயில் திருவிழாவை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தரவு ; அனுமதியின்றி பாரத நிகழ்ச்சியை நடத்திய 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து அடுப்பு வைத்து பால் காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இது தொடர்பாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் சமூகம் முடிவு எட்டப்படாத நிலையில் இந்த தேர் திருவிழாவை ரத்து செய்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் லூர்துசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி ஒரு தரப்பினர் பாரத நிகழ்ச்சியை நடத்தியதாக அரசம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் சங்கராபுரம் போலீசார் நிகழ்ச்சியை நடத்திய சுமார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து இன்று அதிகாலை அதில் இரண்டு பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசம்பட்டு - சங்கராபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி தொடர்ந்து சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையில் அடுப்பு வைத்து பால் காய்ச்சி தற்போது அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையானது காணப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: #2026 ELECTION: ADMK கூட கூட்டணி? அதிரடி முடிவை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இருந்தபோதிலும் பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கு பிடிப்பு கொடுக்காமல் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தால் மட்டுமே போராட்டத்தை கைது கைவிட்டு களைந்து செல்வோம் என உறுதியாக இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தேசிய அளவில் புயலைக் கிளப்ப போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இன்று செய்யப்போகும் தரமான சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share