×
 

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கி.மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

ஆற்றில் அழகர் இறங்கும் ஒரு வைபோகத்தின் போது இதுபோன்று அநாகரிமான செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது நீதிபதி கருத்து.

மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது  செருப்புகளை எரிந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது கைது நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல்.மதுரை சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது
இதில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் திருவிழாவின் முத்திரை  பதிக்கும் நிகழ்ச்சியாகும் இந்நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் கடந்தாண்டு  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பக்தர்கள் மீது  சிலநபர்கள் திட்டமிட்டு செருப்புகளை எடுத்து பக்தர்கள் கூட்டத்திற்குள் எறிகின்றனர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசல் ஏற்படுகிறது. அவ்வாறு வீசும் செருப்புகள் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களையும், கடவுளின் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மீதும் விழுந்து அவமரியாதை செய்யப்படுகின்றனர்.

சிலரின் இத்தகைய செயல்பாடு மதுரை, சித்திரை திருவிழாவிற்கு  வரும் வெளிமாவட்ட, வெளிநாட்டு பக்தர்களின் மனதில் மதுரையைப்பற்றி மிகவும் தாழ்வான ஒரு அபிப்ராயத்தை உருவாக்கும். இவ்வாறு செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தின் போது இதுபோன்று அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!


இந்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்  வைபோகத்திற்காக மூன்று ஆயிரம்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இது போன்ற அநாகரிகமான செயல்கள் ஈடுபடுவோர்கள் யாராக இருந்தாலும் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இதுபோன்று அநாகரிகமான செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தின் போது இதுபோன்ற அநாகரிமான செயல்கள் யாரு செய்தாலும் அவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கைது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 7 கிலோ மீட்டருக்கு அதிரடிப்படை போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share