×
 

திரும்பி வருவாரா-னு திருப்பதி வெங்கடாஜலபதிக்கே தெரியும்... செந்தில் பாலாஜியை கலாய்த்த கல்யாணசுந்தரம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கல்யாண சுந்தரம் விமர்சனம் செய்துள்ளார்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் வந்தா தூக்கி கொண்டாடுவோம்... கடைசி நேரத்துல கூட மாறும்... செல்லூர் ராஜு சூசகம்..!

இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் கொடுத்துள்ளது. செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அதிமுக நிர்வாகி கல்யாணசுந்தரம் விமர்சனம் செய்துள்ளார். முதலில் சம்மன் வாங்க மாட்டேன் என்று கூறிய செந்தில் பாலாஜி பிறகு சம்மனை பெற்றுக் கொண்டதாகவும், வழக்கின் விசாரணைக்கு போவார்., ஆனால் திரும்பி வருவாரா என்பது திருப்பதி வெங்கடாஜலபதிக்கே தெரியும் என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: "எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share