காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
காஞ்சிபுரம் அருகே படு நெல்லி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரன் நீலகண்டன் ஆகிய இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் நான்கு பேர் கைது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆக உயர்வு.
காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோவிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக படு நெல்லி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், நீலகண்டன், ஆகிய இரு வாலிபர்களையும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கஞ்சா,மது போதையில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இந்த கொலை சம்பவம் காரணமாக படு நெல்லி கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!
இச்சம்பவம் குறித்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் 3 தனி படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த பகவதி வயது 24 புஷ்பராஜ் வயது 24 ஆகிய இருவரும் தப்பி ஓட முயற்சித்து தடுக்கி விழுந்து கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில் படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த கிரி வயது 22, பிரபாகர் வயது 22, கலைச்செல்வன் வயது 19 மற்றும் புரிசை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் வயது 24 ஆகிய நான்கு பேரை பொன்னேரி கரை போலீசார் இரட்டை கொலை வழக்கில் கைது செய்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!