×
 

#BREAKING: காஞ்சிபுரம் DSP-ன் கைது ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள பூசிவாக்கம் பகுதியில் சிவகுமார் என்பவர் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மருமகன் லோகேஷ் ஒரு நீதிமன்ற காவலராக பணிபுரிகிறார். இந்தப் பேக்கரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன், புனைப்பெயராக சிமெண்ட் முருகன் என்று அழைக்கப்படுபவர், ஒரு மாதத்திற்கு முன்பு கேக் வாங்க வந்தபோது, கேக்கின் தரம் குறித்து புகார் தெரிவித்ததால் சிவகுமாருக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது, இதில் சிவகுமார், அவரது மருமகன் லோகேஷ், மற்றும் பேக்கரி ஊழியர்கள் முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக முருகன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல், சிவகுமார் தரப்பும் முருகன் மீது புகார் அளித்தது. முருகனின் புகார் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்தப் புகார் மீது ஒரு மாத காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முருகன் தரப்பு குற்றம்சாட்டியது.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், முருகன் தரப்பு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, புகாரின் தீவிரத்தன்மை மற்றும் ஒரு மாத காலமாகியும் காவல் துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த வழக்கில் பொறுப்பு வகித்த காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சங்கர் கணேஷ், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி செம்மல், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கைது செய்ய உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: திடீர் நெஞ்சுவலி... சீருடையுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி மருத்துவமனையில் அனுமதி...!

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய காவல் துறை தவறியதால், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக கைது செய்து, செப்டம்பர் 22, 2025 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சங்கர் கணேஷுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கும் நீதிமன்றம் தடை விதித்தது.

இதையும் படிங்க: வெடிச்சு சிதற போகுது... சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயில் மூலம் வந்த ஓலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share