திடீர் நெஞ்சுவலி... சீருடையுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி மருத்துவமனையில் அனுமதி...!
காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பூசிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது ஒரு மாத காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர் கணேஷ் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வரும் லோகேஷ் என்பவரின் மாமனார் பூசிவாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகன், 'சிமெண்ட் முருகன்' என்று அறியப்படுபவர். இவருக்கும் அப்பகுதியில், இடையே கடந்த மாதம் ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த அடிதடி சம்பவம் குறித்து முருகன், காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் (SC/ST Act) கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், புகார் அளிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் காவல் துறை தரப்பிலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் முருகன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையும் படிங்க: ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... வெடிகுண்டு தயாரித்தவர் எடுத்த விபரீத முடிவு...!
இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புகாரின் தீவிரத்தன்மை குறித்தும், ஒரு மாத காலமாகியும் காவல் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்தது.
விசாரணையின் போது, புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர் கணேஷ் அவர்களுக்கு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
புகார் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறி, நீதிபதி செம்மல் அவர்கள், டிஎஸ்பி சங்கர் கணேஷ் உடனடியாகக் கைது செய்து, வரும் செப்டம்பர் 22, 2025 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு, நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. உயர் பதவி வகிக்கும் ஒரு காவல் துறை அதிகாரி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும்.
இந்த உத்தரவையடுத்து, காவல் துறை அதிகாரிகள் மத்தியில் கடும் பதற்றம் நிலவியது. இந்தநிலையில் காவலர்கள் டிஎஸ்பிஐ சிறையில் அடைக்கு முயற்சி செய்தபோது அதிகளவு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நீதிபதி செம்மல், வாகனத்தில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு அழித்துவரப்பட்டபோது காவல்துறையினர் வாகனத்தில் டிஎஸ்பி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தற்போது வரை அவரை மருத்துவ மனைக்கு கொண்டு வரவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், திடீரென நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் இப்படியா?... சீருடையுடன் மாணவர்கள் செய்த காரியம்... தீயாய் பரவும் வீடியோ...!