“வேட்டியைக் கழட்டி” - அறநிலையத்துறை பெண் அதிகாரி முன்பு ஆபாச சைகை... கோவிலுக்குள் அருவருக்கத் தக்க செயலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு...!
இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்குத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு.
இந்து அறநிலையத்துறை பெண் உதவி ஆணையரான ராஜலட்சுமி, வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பெண் அதிகாரி முன்பு வேட்டியை அவிழ்த்து காண்பித்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் பிரிவில் உதவி ஆணையராக ராஜலட்சுமி பணியாற்றி வருகிறார். அவரின் மேற்பார்வைக்குள் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் நடைபெறும் திருப்பணி பணிகள் தொடர்பாக, சமீபத்தில் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ராஜலட்சுமி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் விவேக் சூர்யா என்ற நபர், அலுவலக அனுமதி இன்றி திடீரென உள்ளே புகுந்து ராஜலட்சுமியிடம் ஒரு வக்கீல் நோட்டீஸை வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸை பெற்றுக்கொண்டதற்கான அத்தாச்சி (அடையாளப் பதிவு அல்லது கையொப்ப உறுதி) வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜலட்சுமி, துறை விதிகளின்படி இப்படியான அத்தாச்சியை வழங்கும் நடைமுறை சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை என தெளிவாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு...!
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, விவேக் சூர்யா தனது செல்போனில் முழு சம்பவத்தையும் வீடியோவாக பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருந்ததால், அங்கு வீடியோ பதிவு செய்வது தடைசெய்யப்பட்ட செயல் என ராஜலட்சுமி எச்சரித்த பிறகு, அவர் திடீரென அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, அவர் வெளியே ஓடிச்செல்லும்போது, கோவில் ஸ்தானிகர் விஜயராகவனை நகத்தால் கீரியதும், பெண் அதிகாரியான ராஜலட்சுமியின் முன் தனது வேட்டியை அவிழ்த்து, அருவருப்பான முறையில் நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இந்த முழு நிகழ்வையும் பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் தானாகவே வழக்கு பதிவு செய்து, விவேக் சூர்யாவை நோக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அலுவலக பாதுகாப்பு, அரசு அதிகாரிகளின் மரியாதை மற்றும் கோவில் நிர்வாகத்தைப் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்பி, உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!