#BREAKING காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா?... ஆட்சியர் வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு...!
காஞ்சிபுரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு மற்றும் தீவிரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வானிலை அமைப்பு புயலாக வலுப்பெற்றால், அதற்கு ‘அர்னாப்’ (Arnab) எனப் பெயரிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான உடனேயே அது புயலாக மாறும் என்று உறுதியாகக் கூற முடியாது. அதன் தீவிரம், நகரும் திசை மற்றும் கடல் சூழல் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை அமையும்.
இதன் காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடாது கொட்டும் அடை மழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!
இதனிடையே, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒளிமுகமது பேட்டை, பெரியார் நகர், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வைய்யாவூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் இரவு முதல் மழை பெய்து வருவதால், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவியது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!