"உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!
முதல்வர் படங்கள் எல்லாம் தலைமையாசிரியர் அலுவலகத்தில் தான் இதுவரை மாட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் புகைப்படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகிகள்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எந்த ஒரு முறையான நெறிமுறை படி நடந்து கொள்வது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. மேலும்,தவெகவின் கட்சி நிர்வாகிகள் அரசு பொறுப்பில் இருப்பதாக நினைத்து கொண்டு பல்வேறு இடங்களில் அதிகாரப்போக்கினை கையில் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அந்த பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவருடன் சென்று முதல்வர் விஜய் புகைப்படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா இவர் தான் முதல்வர் உங்களுக்கு மாமா எங்களுக்கு அண்ணன் என்று பேசியும் , மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?
மேலும்,எந்த ஒரு உள்ளாட்சி பொறுப்பிலும் இல்லாமல்,தவெக துண்டை அணிந்து கொண்டு அரசு அதிகாரிகள் போல் பள்ளி மாணவர்கள் பயிலும் வகுப்பிற்கு சென்று அவர்களது கற்கும் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் சமூக வளைதளங்களில் பரவி பேசுபொருளாகியுள்ளது.
மேலும், முதல்வர் படங்கள் எல்லாம் தலைமையாசிரியர் அலுவலகத்தில் தான் இதுவரை மாட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு வகுப்பறைகளிலும் மாட்டியது மாட்டப்படாமல், இதுவரை இருந்த மரபை மாற்றியமைத்து கல்வி பயிலும் மாணவர்களிடையே அரசியலை விதைக்கு வண்ணம் இவை இருப்பதாக கண்டன பதிவுகள் சமூக வளைதளங்களில் வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!