படித்த மாணவனுக்கு ஃபெயில் மார்க் கொடுக்கும் பாஜக..! பிரேமலதாவை ஆதரித்து கனிமொழி பரப்புரை..!!
விருதாச்சலத்தில் பிரேமலதாவிற்கு ஆதரவாக கனிமொழி பரப்புரையை மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திமுக மும்முரமாக பணியாற்றி வருகிறது. வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற திமுக வேட்பாளர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் விருதாச்சலம் தொகுதியும் இடம்பெற்றிருந்தது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். பழைய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில்,
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி..! மக்களவையில் கனிமொழி வாதம்..!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் செய்தார். மத்திய அரசு கூறியதைக் கேட்டு மக்கள் தொகையை குறைத்த மாநில அரசுகளை தண்டிக்க நினைத்தது மத்திய அரசு என்று தெரிவித்துள்ளார். நன்றாக படித்த மாணவனுக்கு ஃபெயில் மார்க் கொடுக்க நினைத்த பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக இல்ல அமித்ஷா திமுக... எடப்பாடி பழனிசாமியை விளாசிய கனிமொழி...!